மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

ஐஸ் குச்சியில்  அதிசயம்!

ஐஸ் குச்சிகள், செராமிக், களிமண், போன்றவற்றைப் பயன்படுத்தி பல்வேறு புகழ்பெற்ற நினைவுச் சின்னங்களான தாஜ்மகால், வள்ளுவர் கோட்டம், பாரீசில் உள்ள

News image
Updated On :3 ஜனவரி 2024, 10:02 am

ப. சுஜித்குமார்

ஐஸ் குச்சிகள், செராமிக், களிமண், போன்றவற்றைப் பயன்படுத்தி பல்வேறு புகழ்பெற்ற நினைவுச் சின்னங்களான தாஜ்மகால், வள்ளுவர் கோட்டம், பாரீசில் உள்ள ஈபில் கோபுரம் போன்றவற்றின் மாதிரிகளை உருவாக்குகிறார், திருவள்ளூர் அடுத்த காக்களூர் வீட்டுவசதி வாரியக்குடியிருப்பைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர். சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு அரசு கவின்கலைக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
 அவரிடம் பேசினோம்:
 ""நான் 6-ம் வகுப்பு பயிலும் போதே, களிமண்ணால் ஆன மரச்சிற்பத்தை வடிவமைத்தேன். தொடர்ந்து ஐஸ் குச்சிகளைக் கொண்டு தாஜ்மகால், பாரிஸில் உள்ள ஈபில்கோபுரம் போன்றவற்றின் மாதிரிகளை வடிவமைத்தேன். நான் வடிவமைத்த சிற்பங்களிலேயே ஈபில் கோபுர மாதிரியை தயார் செய்ய ஒரு மாத காலம் ஆகியது.
 இதுதவிர செராமிக் ஓவியம் வரைவது, ஆயில் பெயிண்டிங் போன்றவற்றிலும் எனக்கு ஈடுபாடு அதிகம். சென்னை, மதுரை, பெங்களூர் போன்ற பல்வேறு நகரங்களில் எனது படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டன.
 சிற்பங்களின் தன்மை, வகைக்கு ஏற்ப விலை கிடைக்கும். அதிகபட்சமாக திருநெல்வேலியில் ஒருவருக்கு செய்து அளித்த டெரகோட்டா சிற்பம் ரூ.1 லட்சத்துக்கு விலை போனது. டெரோகோட்டா சிற்பங்களை வடிவமைக்க ஒரு வார காலம் தேவைப்படுகிறது.
 எதிர்காலத்தில் சிறுவர், சிறுமியருக்கு ஓவியக்கலை, சிற்பங்களை வடிவமைப்பது குறித்து பயிற்றுவிப்பது எனது தலையாய நோக்கமாக கொண்டுள்ளேன்'' என்கிறார் அலெக்சாண்டர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.